விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கடன் பிரச்சினையால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
வாணாபுரம்
வாணாபுரம் அருகே உள்ள மெய்யூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55), கூலித் தொழிலாளி.
இவர் பலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையில் இருந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story