குடிமங்கலம் அருகே குறிஞ்சேரியில் சிதிலமடைந்து வரும் பழமையான அம்மன் கோவிலை சீரமைக்க வேண்டும்
குடிமங்கலம் அருகே குறிஞ்சேரியில் சிதிலமடைந்து வரும் பழமையான அம்மன் கோவிலை சீரமைக்க வேண்டும்
குடிமங்கலம்:
குடிமங்கலம் அருகே குறிஞ்சேரியில் சிதிலமடைந்து வரும் பழமையான அம்மன் கோவிலை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பழமையான கோவில்
குடிமங்கலம் அருகே குறிஞ்சேரியில் பழமையான அம்மன் கோவில் உள்ளது. பெருமையும் பழமையும் வாய்ந்ததாக ஊரின் பெயரிலேயே குறிஞ்சேரிஅம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது. கோவிலின் முன்பகுதியில் நந்திக்கு அழகிய சிறிய கோபுரத்துடன் நுழைவாயில் கட்டப்பட்டுள்ளது. அழகிய வளைவுகளுடன் கூடிய முன் மண்டபம், மேற்கூரை அழகிய கட்டமைப்புடன் கல்லினால் கட்டப்பட்டுள்ளது.
கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் கோவில் முழுவதும் பராமரிப்பு இல்லாததால் முன்பகுதி முழுவதும் சிதிலமடைந்து காணப்படுகிறது. பழமையான இக்கோவிலில் உள்ள சிலைகள் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இக்கோவில் தற்போது சிதிலமடைந்து வருகிறது
புதுப்பிக்க வேண்டும்
கோவிலின் முன்மண்டபத்தில் உள்ள விநாயகர் சன்னதி சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் மேற்கூரையும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் புகுந்து மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் தார்ப்பாய் வைத்து மேற்கூரையை மூடியுள்ளனர்.
கிராமத்தின் வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் அம்மன் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொன்மையான கோவிலை சீரமைக்க தொல்லியல்துறை வழிகாட்டுதல் பெற்று இந்து அறநிலைத்துறை உடனடியாக கோவிலை புதுப்பிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story