மசினகுடி அருகே ஆதிவாசி கிராமத்தில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு


மசினகுடி அருகே ஆதிவாசி கிராமத்தில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 17 March 2022 9:36 PM IST (Updated: 17 March 2022 9:36 PM IST)
t-max-icont-min-icon

மசினகுடி அருகே ஆதிவாசி கிராமத்தில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்தார்.

கூடலூர்

மசினகுடி ஊராட்சி பொக்காபுரம் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இந்தபள்ளிக்கு மாணவர்கள் சரிவர வருவதில்லை எனக் கூறப்படுகிறது.

 இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசரூதீன் பொக்காபுரம் குரும்பர் பள்ளம் ஆதிவாசி கிராமத்தில் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது ஒவ்வொரு வீடு வீடாக சென்று பார்வை யிட்டார். 

அங்கு பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் மாணவ-மாணவிகள் தங்களது வீடுகளில் இருப்பதைக் கண்டறிந்தார். தொடர்ந்து ஆதிவாசி மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதுடன் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு தினமும் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

பின்னர் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் பெயர் விபரங்களை சேகரித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வழங்கி பள்ளிக்குச் செல்ல உத்தரவிட்டார். ஆய்வின்போது பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் கலாவதி உள்பட ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


Next Story