கூடலூரில் மரக்கிளை முறிந்து கார் சேதம்
கூடலூரில் மரக்கிளை முறிந்து கார் சேதமடைந்தது.
கூடலூர்
கூடலூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் மரங்களின் நிழலை தேடி பொதுமக்கள் செல்லும் நிலை உள்ளது. கூடலூர் -தேவர் சோலை சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே மாணவர்கள், பொதுமக்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
தொடர்ந்து அந்த வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் திடீரென அப்பகுதியில் இருந்த ராட்சத மரத்தின் ஒரு கிளை முறிந்து கார் மீது விழுந்தது.
இதில் கூடலூர் செம்பாலா பகுதியைச் சேர்ந்த ரசாக் உள்பட 4 பேர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருந்தபோதிலும் கார் சேதமடைந்தது. தகவலறிந்த கூடலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிதுரை விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story