மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு
மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு
ராசிபுரம்:
மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.
வருகை பதிவு
ராசிபுரம் தாலுகா மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அங்குள்ள பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி ஆகியவற்றை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள் விவரம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவு குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து கலெக்டர் ஆசிரியர்களிடம் நாமக்கல் மாவட்டத்தில் லாரி டிரைவர்கள், லாரி, நெசவு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை எளியவர்களின் பிள்ளைகள் அதிகம் அரசு பள்ளிகளில் மட்டுமே பயின்று வருகின்றனர். தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் வருகையை உறுதி செய்வதுடன் அவர்கள் நன்கு படித்து உயர் நிலையை அடைய வைப்பது தங்களது கடமை என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.
சமையல் அறை
பின்னர் அங்குள்ள பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் ஆய்வு செய்த கலெக்டர் மாணவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சமையலறை சுகாதார முறையில் உள்ளதா? என்பதையும் சமையல் அறையில் மாவு அறைப்பதற்கான எந்திரம் நல்ல நிலையில் உள்ளதா? என்றும் மின்விசிறி, மின்விளக்கு ஆகியவை சரியாக இயங்குகின்றனவா என்றும் ஆய்வு செய்தார்.
கழிப்பிடங்கள், குளியல் அறை சுத்தமாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், விடுதி காப்பாளர், அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story