விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 12:30 AM IST (Updated: 17 March 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிக்கல்:-

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டம் கீழ்வேளூர், சாட்டியக்குடி, சிக்கல் ஆகிய இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கீழ்வேளூர் கடைத்தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிக்கல் கடைத்தெருவில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் முருகையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர்கள் ராஜா, வடிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சாட்டியக்குடி கடைத்தெருவில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

Next Story