தர்மபுரி கடைவீதியில் 32 கண்காணிப்பு கேமராக்கள் போலீஸ் சூப்பிரண்டு இயக்கி வைத்தார்
தர்மபுரி கடைவீதியில் 32 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை போலீஸ் சூப்பிரண்டு இயக்கி வைத்தார்.
தர்மபுரி:-
தர்மபுரி கடைவீதி துரைசாமி நாயுடு தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் நகைக்கடை உரிமையாளர்கள் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பில் 32 கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி. கேமராக்கள்) முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் நேற்று முன்தினம் இரவு இயக்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது, ‘குற்றங்கள் நடந்தால் கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் உதவும். இதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்க பொதுமக்கள் முன்வரவேண்டும்’ என்றார். இதில், துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், நகராட்சி ஆணையர் சித்ரா, இன்ஸ்பெக்டர் நவாஸ், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, பெருமாள், நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி ராஜசேகர், அனைத்து வணிகர் சங்க தலைவர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story