ஜோலார்பேட்டை அருகே கள்ளக்காதலியை கணவன் அழைத்ததால் வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை


ஜோலார்பேட்டை அருகே கள்ளக்காதலியை கணவன் அழைத்ததால் வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
x

ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபர், அவருடைய கள்ளக்காதலியை கணவன் அழைத்ததால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

 ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபர், அவருடைய கள்ளக்காதலியை கணவன் அழைத்ததால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் அருகே கடந்த 2 தினங்களுக்கு முன்பு ரெயிலில் அடிபட்டு வாலிபர் இறந்தார். அவர் யார், எந்த ஊர் என்பது தெரியாமல் இருந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்தவர் திருப்பத்தூர் அருகே உள்ள அப்பாய் தெரு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சுகவனம் (வயது 25) என்பதும், குடும்ப தகராறு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
களளக்காதலி

சுகவனத்திற்கு திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த திருமணம் ஆன ஒரு பெண்ணுடன் கள்ளக் காதல் ஏற்பட்டு கடந்த ஆறு மாதங்களாக தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். அந்த பெண் ஏற்கனவே ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்று சில தினங்களிலேயே கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் தனது பெற்றோருடன் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் பெண்ணின் கணவர் சுகவனம் வீட்டிற்கு சென்று தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுகவனம் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது ரெயில்வே போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story