கர்நாடகத்தில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் அரசு மாதிரி பள்ளி-மந்திரி பி.சி.நாகேஸ்
கர்நாடகத்தில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் அரசு மாதிரி பள்ளி தொடங்கப்படும் என்று மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளார்
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தில் ஜனதாதளம் (எஸ்) உறுப்பினர் சிவலிங்கேகவுடா கேட்ட கேள்விக்கு பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பதிலளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் தற்போது 276 அரசு பப்ளிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு கன்னடம் மற்றும் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதனால் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் (ஓபளி) ஒரு மாதிரி பள்ளியை தொடங்க முடிவு செய்துள்ளோம். வரும் காலத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கு ஒரு மாதிரி பள்ளியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
இந்த பள்ளிக்கு தேவையான ஆசிரியர்கள் குறிப்பாக ஆங்கில புலமை உள்ள ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களை நியமனம் செய்யும் பணியை அரசு மேற்கொள்கிறது. மேலும் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சியும் வழங்குகிறோம். தற்போது செயல்பட்டு வரும் பப்ளிக் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் காலத்தில் அரசு பப்ளிக் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
இவ்வாறு மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.
Related Tags :
Next Story