வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு எனது வாக்கு எனது எதிர்காலம் ஒரு வாக்கின் வலிமை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளை தொடங்கி உள்ளது.
அதன்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம் வரைதல், சுவரொட்டி வரைதல், ஒரு வரியில் விழிப்புணர்வு வாசகம் எழுதுதல், பாட்டு, குழு நடனம் மற்றும் கட்டுரை போட்டிகள் மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியால் நடத்தப்பட உள்ளது. எனவே 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தவறிய மாணவர்கள் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் இணையதளத்தில் (https:/www.elections.tn.gov.in/) உள்ள “SWEEP Contest -2022” என்ற இணையவழியின் மூலமாக போட்டியில் நேரடியாக பங்கேற்கலாம். மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தவறிய மாணவர்கள் பொதுமக்களுக்கு வரையறுக்கப்பட்ட போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.
இயங்கலை (ஆன்லைன்) போட்டிக்கான கருத்துருக்கள் தேர்தல்கள், 100 சதவீதம் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு மற்றும் வாக்களிப்பை மேம்படுத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் முயற்சிகள் ஆகியவை ஆகும். இதில் அனைத்து வயதினரும் பங்கேற்க 15-3-2022-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்கு வருகிற 31-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டுக்கப்பட்டுள்ளது. எனவே இப்போட்டிகளில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் தங்களது விவரங்களை இணைத்து வருகிற 31-ந்தேதிக்குள் voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி போட்டிகளில் பங்கேற்கலாம். மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story