கந்திகுப்பம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
கந்திகுப்பம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
பர்கூர், மார்ச்.18-
கந்திகுப்பம் அருகே உள்ள எலத்தகிரியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய மனைவி மஞ்சு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் வீட்டிற்கு சென்ற அவர் வரவில்லை. இதனால் மனமுடைந்த சுரேஷ் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கந்திகுப்பம் போலீசார் சுரேஷின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story