ஓசூரில் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேருக்கு வலைவீச்சு


ஓசூரில் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 March 2022 10:31 PM IST (Updated: 17 March 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேருக்கு வலைவீச்சு

ஓசூர்:
ஓசூர் ஆவலப்பள்ளி அருகே உள்ள திம்மசந்திரத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30). தேர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர். கடந்த 15-ந் தேதி இரவு வினோத்குமார் அலசநத்தம் பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிரபு மற்றும் மேலும் 2 பேர் வினோத்குமாரை வழிமறித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரை கத்தியால் குத்தினார்கள். இதில் காயம் அடைந்த வினோத்குமார் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story