தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பகுதி
குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமலும், கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையிலும் பராமரிப்பின்றி உள்ளது. பள்ளி நிர்வாகம் குடிநீர் தொட்டியையும், கழிவறையையும் சுத்தமாக வைக்க வேண்டும்.
-லட்சுமணன், நெமிலி.
நிலுவை மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
அரக்கோணம் தாலுகா மோசூர், அம்பரீஷ்புரம் கிராமத்தில் பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு மாற்றம் தொடர்பாக இ.சேவை மையம் மூலம் விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் இன்று வரை பட்டா வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் பயிர்க்கடன், காப்பீட்டுக்கடன் பெறுவது சிரமமாக உள்ளது. நிலுவையில் உள்ள பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு மாற்றம் தொடர்பான மனுக்கள் மீது தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆர்.எஸ்.குமார், அரக்கோணம்.
ஆபத்தான மின்கம்பம்
அரக்கோணம் வடமாம்பாக்கம் கண்டிகை பகுதியில் விவசாய நிலங்களில் மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. அதன் சிமெண்டு பூச்சு பெயர்ந்து எலும்புக்கூடாக உள்ளது. அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-மாயகண்ணன், அரக்கோணம்.
கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்
வேலூர் கொசப்பேட்டை சுப்பிரமணியசாமி கோவில் பின்பக்கம் வள்ளலார் வீதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. அதில் குப்ைபகள் அதிகமாக காணப்படுவதால் கழிவுநீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வாசு, வேலூர்.
உடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்
வேலூர் அண்ணாசாலை லட்சுமி தியேட்டர் அருகே கிருஷ்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் மின் கம்பம் உடைந்து விழுந்தது. அதற்கு பதிலாக மற்றொரு மின்கம்பம் அமைக்கப்பட்டது. எனினும் உடைந்த மின்கம்பத்தை அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டனர். எனவே உடைந்த மின்கம்பத்தை மின்வாரியத்துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
-மாயவன், வேலூர்.
முடங்கிய சாலை பணி எப்போது முடியும்?
வேலூர் மாநகராட்சி மண்டலம் 1-ல் கல்புதூர் ராஜீவ்காந்தி நகர், அம்பேத்கர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பர்னீஸ்புரம் சாலை, ஆசிரியர் காலனி ஆகிய 1-வது வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் சாலை அமைப்பதற்காக பல மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் பரப்பினர். ஆனால் பணி நடக்காமல் முடங்கி உள்ளதால் ஜல்லிக்கற்கள் மீது நடப்பதற்கே சிரமமாக உள்ளது. எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.துரை, கல்புதூர்.
சென்னை பஸ்சை போளூர், ஆரணி வழியாக இயக்க வேண்டும்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இருந்து சென்னை செல்லும் பஸ்சை (எண் 240) போளூர், ஆரணி, ஆற்காடு, பூந்தமல்லி வழியாக இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர் பரிசீலனை செய்ய வேண்டும்.
-கணேசன், கடலாடி.
டிரான்ஸ்பார்மர் இடமாற்றம் செய்யப்படுமா?
தண்டராம்பட்டு ஒன்றியம் தொண்டமனூர் கிராம குடியிருப்பு மையப்பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அது, வீட்டின் அருகில் இருப்பதால் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். பெரிய அளவில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் குடியிருப்பு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்.
-சாமிநாதன், தொண்டமனூர்.
Related Tags :
Next Story