செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பெண்ணிடம் ரூ1 லட்சம் மோசடி
வங்கி கணக்கை முடக்கியுள்ளதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பெண்ணிடம் ரூ.1 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் மனைவி முத்துலட்சுமி (வயது 41). இவருடைய செல்போனுக்கு கடந்த 14-ந் தேதியன்று ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், அவரது வங்கி கணக்கை முடக்கியுள்ளதாகவும், இந்த லிங்கை கிளிக் செய்து பான் கார்டு எண்ணை இணைக்குமாறு கூறப்பட்டிருந்தது.
அதன்படி முத்துலட்சுமியும், அந்த லிங்கை கிளிக் செய்து யூசர் நேம், பாஸ்வேர்டு, பிறந்த தேதி ஓ.டி.பி. ஆகிய விவரங்களை பதிவு செய்ததும் அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 347-ஐ யாரோ மர்ம நபர் நூதனமாக திருடி விட்டதாக மற்றொரு குறுஞ்செய்தி வந்தது.
மர்ம நபருக்கு வலைவீச்சு
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி, இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story