கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டம்


கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 17 March 2022 10:46 PM IST (Updated: 17 March 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் ராமநாதபுரம் பாரதிநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கழுதையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த விடாமல் தடுக்கும் அதிகாரிகளை கண்டித்தும், அல்லிக்கண்மாய், இந்திராநகர் சுடுகாடுகள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் உள்ளதை கண்டித்தும், 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய ரெயில்வே மேம்பால பணி எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்தும் காட்டூரணியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
ேபாராட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகம்மது யாசின், ஆதிதமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட துணை செயலாளர் அப்துல்ஜமீல், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் இப்ராகிம் மற்றும் தோழமை கட்சியை சேர்ந்த பிரபாகரன், வேந்தை சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கழுதையிடம் வழங்கி முறையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story