பெண் தற்கொலை


பெண் தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2022 11:00 PM IST (Updated: 17 March 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அருகே சேரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ரஜாக் மகள் ஆஜிராப்பீ (வயது 32). இவருக்கும் உளுந்தூர்பேட்டை வட்டம் வெள்ளையூர் கிராமத்தை சேர்ந்த சுல்தான் மகன் சையத் முகமது என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது. 

இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆஜிராப்பீ தனது கணவரை பிரிந்து சேரந்தாங்கலில் உள்ள தனது அண்ணன் அப்பாஸ் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று ஆஜிராப்பீ வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்             பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஜீராப்பீ தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story