அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
எலவனாசூர்கோட்டை அா்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டையில் பழமைவாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறும். இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 2020 மற்றும் 21-ம் ஆண்டுகளில் தேரோட்டம் நடைபெறவில்லை. தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜைகளுடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜைகளுடன் பங்குனி மாதத்தில் தேரோட்ட விழா தொடங்கியது.
தேரோட்டம்
தொடர்ந்து நேற்று காலையில் அர்த்தநாரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் அலங்காித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் பிரகன்நாயகி சமேத அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளினார். இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.
இதை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
தேரானது நான்கு மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story