செல்போன் கோபுர உதிரிபாகங்களை கழற்றி விற்ற 6 பேர் மீது வழக்கு


செல்போன் கோபுர உதிரிபாகங்களை கழற்றி விற்ற 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 March 2022 11:13 PM IST (Updated: 17 March 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் வாடகை தராததால் செல்போன் கோபுர உதிரிபாகங்களை கழற்றி விற்ற 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம், 

புதுச்சேரியை சேர்ந்தவர் திலீப்குமார்(வயது 30). இவர் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியில் உள்ள பழனியப்பன் என்பவருடைய வீட்டின் மாடியில் கடந்த 2009-ம் ஆண்டு செல்போன் கோபுரம் வைத்திருந்தார். அதற்கான வாடகையை திலீப்குமார் செலுத்தி வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை வாடகை தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழனியப்பனின் மகன்களான ராமசாமி, கந்தசாமி மற்றும் உறவினர்கள் சேகர், ரவி, பாஸ்கர், லட்சுமணன் ஆகிய 6 பேரும் சேர்ந்து ரூ.26 லட்சத்து 76 ஆயிரத்து 352 மதிப்புள்ள செல்போன் கோபுர உதிரிபாகங்களை கழற்றி விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திலீப்குமார், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ராமசாமி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story