சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு,
பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சுந்தரமகாலிங்கம் கோவில்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்்ணமி நாட்களையொட்டி மட்டுமே பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பங்குனி மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். காலை 7 மணிக்கு கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டது.
ஏராளமானோர் தரிசனம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சுவாமிக்கு 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் மலைப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே எளிதில் தீப்பற்றக்கூடிய சாதனங்களை யாரும் மலைப்பகுதிக்கு எடுத்துச்செல்லாமல் இருக்கவும், பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்களிடம் இருந்து பறிமுதல் செய்யவும் வனத்துறையினர் சோதனை நடத்தி, பக்தர்களை மலையேற அனுமதிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story