பரமக்குடி, தொண்டியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பரமக்குடி, ெதாண்டியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பரமக்குடி,
பரமக்குடி, ெதாண்டியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றம்
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பரமக்குடி திரவுபதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ஊருணியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் சுற்றுச் சுவர், மேற்கூரைகள் ஆகியவற்றை அகற்றும் பணி நடந்தது. ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.அப்போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோர்ட்டு உத்தரவின்படி ஏற்கனவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடர்ந்தனர்.இதில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன், துணை சூப்பிரண்டு திருமலை, தாசில்தார் தமிம் ராஜா ஆகியோர் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
ெதாண்டி
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் ஆகியோர் திருவாடானை தாலுகாவில் உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமையில் வருவாய்துறை அலுவலர்கள் திருவாடானை யூனியன் அரசத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய் புறம்போக்கில் வரப்புகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்து இருந்ததை அகற்றினர்.
அதேபோல் தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.ஆர்.பட்டினம் கிராமத்தில் ஊருணி இருந்த இடத்தை அருகில் உள்ள பட்டாதாரர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.அதில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய அலுவலர்கள் ஊருணி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிய அதிகாரிகள் அந்த இடத்தில் சர்வே அளவீடு செய்து கற்கள் நட்டனர்.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ, தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் சிதம்பரம், கிராம நிர்வாக அலுவலர் ராதா, கிராணவள்ளி, நில அளவர் ராஜதுரை, மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story