பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம்
பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயில்பட்டி,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி வெம்பக்கோட்டை தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தம்
காற்று மாசு ஏற்படுவதாக பட்டாசு உற்பத்திக்கு பயன்படும் முக்கிய மூலப்பொருளான பேரியம் நைட்ரேட் ரசாயன மூலப்பொருளுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது, அதேபோல் சரவெடி தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பட்டாசு உற்பத்தியில் 80 சதவீத பங்கு வகிக்கும் பேரியம் நைட்ரேட் மூலப்பொருளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பட்டாசு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 21-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்க தலைவர் காத்தலிங்கம் அறிவித்துள்ளார்.
220 பட்டாசு ஆலைகள்
அதன்படி இந்த சங்கத்தின் கீழ் உள்ள 220 பட்டாசு ஆலைகள் வருகிற 21-ந் தேதி முதல் காலவரையின்றி மூட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story