திருப்பதியில் இருந்து ஆண்டாள் கோவிலுக்கு சீர்வரிசை
திருப்பதியில் இருந்து ஆண்டாள் கோவிலுக்கு சீர்வரிசை வந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வெள்ளிக்கிழமை ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் இந்த விழாவை முன்னிட்டு ஆண்டாளுக்கு சீர்வரிசையாக மங்கல பொருட்கள் மற்றும் பட்டுப்புடவை ஆகியவை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து அனுப்பி வைக்கப்படும். வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட உள்ள பட்டுப்புடவை மற்றும் சீர்வரிசை பொருட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து ஆண்டாள் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டன. கோவில் தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி முத்துராஜ் ஆகியோர் அவற்றை பெற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story