கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்,
விருதுநகர் பட்டு தெருவை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி லதா. இவர்களது மகன் செல்வகுமார் (வயது 22). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு உடற்கல்வி பட்டப்படிப்பு படித்து வந்தார். தினமும் மாலையில் கல்லூரி சாலையில் உள்ள பூங்கா மைதானத்தில் தனது நண்பர்களுடன் செல்வகுமார் கால்பந்து விளையாடுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டதால் செல்வகுமாரால் சரிவர கால்பந்து விளையாட முடியாத நிலையில் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நண்பர்கள் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற செல்வகுமார் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கல்லூரி சாலையில் பூங்காவில் உள்ள ஒரு மரத்தில் செல்வகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story