விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம் நெடுங்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டம் மற்றும் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டாமல் கட்டியதாகவும், ஏழைகளுக்கு இலவச கழிப்பறைகள் கட்டாமல் பெரும் ஊழல் செய்த அரசு அதிகாரிகள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெடுங்குடி கிளை செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொருளாளர் சங்கர் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் சண்முகம், சி.பி.ஐ.எம். அரிமளம் ஒன்றிய செயலாளர் ராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story