தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2022 11:53 PM IST (Updated: 17 March 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள எம்.ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சினேகலட்சுமி(23). இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சரவணக்குமார் வீட்டில் தூக்குப்போட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story