அரிசி கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.6 ஆயிரம் திருட்டு
குடவாசலில் அரிசி கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.6 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
குடவாசல்:
குடவாசல் பள்ளிவாசல் தெருவில் உள்ள சம்சுதீன் என்பவர் அரிசி கடை வைத்துள்ளார். இவர் கடந்த 15-ந்தேதி இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலை அவர் கடையை திறந்த போது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கல்லாப்பெட்டியை பார்த்த போது அதில் இருந்த ரூ.6 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.6 ஆயிரத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சம்சுதீன் கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் திருட்டு நடந்த கடையில் இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர்.
Related Tags :
Next Story