தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தண்ணீர் இன்றி பக்தர்கள் அவதி
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது பூச்சொரிதல் விழா நடந்துவரும் வேளையில் புள்ளம்பாடி மற்றும் பெருவளவாய்க்காலில் தண்ணீர் இன்றி பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும என கேட்டுக்கொள்கிறோம்.
ஞானசேகரன், மண்ணச்சநல்லூர், திருச்சி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், சிருதையூர் அக்ரஹாரம் மற்றும் உமர் நகர் இடையில் அமைந்துள்ள கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரமாகி வாய்க்கால் தூர்ந்துபோய் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், லால்குடி, திருச்சி.
பொது கழிவறையை சுற்றி முளைத்துள்ள செடி, கொடிகள்
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, கோமக்குடி மேல தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் தேவைக்காக அப்பகுதியில் பொது கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பராமரிப்பு இன்றி செடிகொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் மின் இணைப்பு இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கோமக்குடி, திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், லால்குடி வாழியூரில் அமைக்கப்பட்டுள்ள சாலை சிதிலமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதுடன் பள்ளி, கல்லூரிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வாழியூர், திருச்சி.
Related Tags :
Next Story