தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்- குன்றக்குடி அடிகளார் சந்திப்பு


தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்- குன்றக்குடி அடிகளார் சந்திப்பு
x
தினத்தந்தி 18 March 2022 12:04 AM IST (Updated: 18 March 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும், குன்றக்குடி அடிகளாரும் சந்தித்து கொண்டனர்.

காரைக்குடி,

காரைக்குடியில் கம்பன் கழக விழாவில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் குன்றக்குடி திருமடம் சென்றார். அங்கு மங்கல இசை ஒலிக்க, கோவில் யானை ஆசீர்வாதம் செய்ய, பூரண கும்ப மரியாதையுடன் கவர்னரை குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் வரவேற்றார். பின் திருமடம் சென்ற கவர்னருக்கு திருமடம் சார்பாக குன்றக்குடி அடிகளார் எழுதிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் கவர்னரும் குன்றக்குடி அடிகளாரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அதன்பின் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நடைபெற்ற சண்முகநாதப் பெருமான் கோவில் தெப்ப திருவிழா நிகழ்ச்சியில் கவர்னர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருடன் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.


Next Story