மாங்கநாம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்


மாங்கநாம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 18 March 2022 12:07 AM IST (Updated: 18 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

மாங்கநாம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டில் 586 காளைகள் சீறிப்பாய்ந்தன. 24 ேபர் காயமடைந்தனர்.

திருவரங்குளம்:
ஜல்லிக்கட்டு 
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே மாங்க நாம்பட்டி கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையடுத்து வீரமாகாளியம்மன் கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து இருந்து வந்திருந்த 586 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
பரிசு பொருட்கள்
காளைகள் முட்டியதில் 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 3 பேர் ேமல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. 
இதில் இந்திய விலங்குகள் நல ஆணைய தலைவர் மிட்டல், மாவட்ட அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், விழாக்குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் மாங்க நாம்பட்டி பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story