கள்ளன் படத்தின் தலைப்பை மாற்ற கோரிக்கை
கள்ளன் படத்தின் தலைப்பை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
சிவகங்கை,
தமிழ்நாடு கள்ளர் படைப்பாற்றல் நல சங்க மாநில தலைவர் வசந்த் காடவராயர் தலைமையில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-
பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான கரு.பழனியப்பன் நடிப்பில் கள்ளன் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை பெண் இயக்குனர் சந்திரா தங்கராஜ் இயக்கி வருகிறார். இந்நிலையில் அந்த திரைப்படத்தின் தலைப்பு ஒரு சமுதாய மக்களை தவறாக சித்தரிப்பதாகவும் அந்த திரைப்படத்தின் கதை சாதிய மோதல்களை உருவாக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், எனவே அந்த திரைப்படம் தலைப்பை மாற்ற கோரியும் அதே பெயரில் படம் வெளியானால் அந்த திரைப்படம் திரையரங்குகளில் திரையிட தடை விதிக்க வேண்டும். மேலும் பெயர் மாற்றாமல் படம் திரையிடப்பட்டால் தங்கள் அமைப்பின் சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story