பலசரக்கு கடையில் பணம் திருட்டு


பலசரக்கு கடையில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 18 March 2022 12:13 AM IST (Updated: 18 March 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

பலசரக்கு கடையில் பணம் திருடப்பட்டது.

சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள எஸ்.என்.புரத்தை சேர்ந்தவர் பெத்தன்ராஜ் (வயது 56). இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் அடுத்த நாள் காலையில் வழக்கம்போல் கடையை திறக்க வந்த போது கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெத்தன்ராஜ் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 ஆயிரம் காணவில்லை. மர்ம நபர் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து அவர், திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story