மகனுடன் மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு


மகனுடன் மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 18 March 2022 12:18 AM IST (Updated: 18 March 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகையை மர்மநபர் பறித்துச் சென்றார்.

நெல்லை:
நெல்லை தாழையூத்து அருகே கீழ தென்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (வயது 55). இவர் நேற்று முன்தினம் தன்னுடைய மகன் சண்முகசுந்தரத்துடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை டவுனுக்கு சென்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தங்களது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
நெல்லை அருகே கீழ தென்கலம் பகுதியில் சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்தவாறு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று பேச்சியம்மாளின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர். உடனே சண்முகசுந்தரம் ‘திருடன் திருடன்’ என்று கூச்சலிட்டவாறே மர்மநபர்களை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றார். ஆனாலும் மர்மநபர்கள் சிக்காமல் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story