பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம்
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காரைக்குடி,
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திர திருவிழா
காரைக்குடி அருகே குன்றக்குடியில் பிரசித்தி பெற்ற சண்முகநாத பெருமான் கோவில் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் இரவில் சண்முகநாதபெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
9-ம் நாள் விழாவான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் உற்சவர், வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு நாட்டார்கள் மேளதாளத்துடன் வந்தனர். மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
நேர்த்திக்கடன்
அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணி்க்கு தேர் நிலையை வந்தடைந்தது.
இன்று (வெள்ளிக்கிழமை) பங்குனி உத்திர தினத்தையொட்டி பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல், அக்னி காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story