விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 12:27 AM IST (Updated: 18 March 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட தலைவர் மாயகிருஷ்ணன், செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்டம் முழுவதும் விவசாயிகள் பயன்பெறும் இடங்களில் புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள தரகர்களை வெளியேற்ற வேண்டும். வியாபாரிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யக்கூடாது. ஆன்லைன் என்ற பெயரில் விவசாயிகளை அலைக்கழிக்காமல், பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுடலைராஜ், பெருமாள், விவசாய சங்க பொருளாளர் முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருணாசலம் மற்றும் செல்வம், ரஜினி, இலோசியஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story