குமரியில் பரவலாக மழை: அதிகபட்சமாக சுருளோட்டில் 55 மில்லி மீட்டர் பதிவு
குமரி மாவட்டத்தில் பெய்த மழையால், அதிகபட்சமாக சுருளோடு பகுதியில் 55 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பெய்த மழையால், அதிகபட்சமாக சுருளோடு பகுதியில் 55 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.
பரவலாக மழை
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகர்கோவில் பகுதியில் திடீரென வானில் கார்மேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. நேரம் செல்ல, செல்ல மழை வெளுத்து வாங்கியது. இதேபோல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.
அதிகபட்சமாக சுருளோடு பகுதியில் 55 மில்லி மீட்டர் மழை பதிவானது. மலையோரம் மற்றும் அணைகளின் நீா்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணைகளில் இருந்து சற்று அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளில் கூடுதல் தண்ணீர் ஓடுகிறது.
Related Tags :
Next Story