நாகர்கோவில்- காவல்கிணறு 4 வழிச்சாலையில் மே மாதம் முதல் போக்குவரத்து தொடங்கும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்

நாகர்கோவில்- காவல்கிணறு 4 வழிச்சாலையில் மே மாதம் முதல் போக்குவரத்து தொடங்கும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 18 March 2022 12:30 AM IST (Updated: 18 March 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில்- காவல்கிணறு 4 வழிச்சாலைப்பணிகள் வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மே மாதம் முதல் போக்குவரத்து தொடங்கப்படும் என மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

நாகர்கோவில், 

கண்காணிப்புக் குழு கூட்டம்
குமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் விஜயகுமார், விஜய்வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட்தாஸ் மற்றும் வேளாண்மை துறை, நெடுஞ்சாலைத்துறை, குடிநீர்வடிகால் வாரியம், சுகாதாரத்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியத்துறை, போக்குவரத்துத்துறை, போலீசார் உள்பட அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story