பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
கொரடாச்சேரி அருகே பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொரடாச்சேரி:
திருவாரூரில் இருந்து தஞ்சையை நோக்கி நேற்று மதியம் ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் கடைவீதியில் வந்த போது மதுபோதையில் வந்த சிலர் கற்களை வீசி பஸ்சை தாக்கினர். இதனால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பஸ்சின் மீது கற்களை வீசி விட்டு தப்பி ஓடியவர்களை பிடிக்க பஸ் பயணிகள் விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனால் திருவாரூர்-தஞ்சை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தனியார் பஸ் டிரைவர் பிரபாகரன் கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மையப்பனை சேர்ந்த சபரிநாதன் (வயது 28) என்பவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story