17 டன் ரேஷன் அரிசி லாரியில் கடத்தல்


17 டன் ரேஷன் அரிசி லாரியில் கடத்தல்
x
தினத்தந்தி 18 March 2022 12:57 AM IST (Updated: 18 March 2022 12:57 AM IST)
t-max-icont-min-icon

பள்ளத்தூர் பகுதியில் 17 டன் ரேஷன் அரிசி லாரியில் கடத்தப்பட்டது. அதை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

காரைக்குடி,

பள்ளத்தூர் போலீஸ் சரகம் மனச்சை அருகே உள்ள ஒரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூடைகள் ஒரு லாரியில் ஏற்றப்பட்டு கரூருக்கு கடத்திச்செல்லப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரியை பள்ளத்தூரில் மடக்கி பிடித்தனர். பின் இதுகுறித்து பள்ளத்தூர் போலீசாருக்கும், மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டபோது 17 டன் ரேஷன் அரிசி கரூருக்கு கடத்திச்செல்வது தெரியவந்தது. லாரி டிரைவர் மணி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து உணவு கடத்தல் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.லாரியும் கடத்தப்பட்ட ரேஷன் அரிசிமூடைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story