வைகை ஆற்றை சீரமைக்கும் பணி தொடக்கம்
மானாமதுரையில் சித்திரை திருவிழாவுக்காக வைகை ஆற்றை சீரமைக்கும் பணி தொடங்கியது.
மானாமதுரை,
மானாமதுரையில் சித்திரை திருவிழாவுக்காக வைகை ஆற்றை சீரமைக்கும் பணி தொடங்கியது.
சோமநாதர் கோவில்
மதுரைக்கு அடுத்தப்படியாக மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் நடைபெறும் சித்திைர திருவிழா பிரசித்தி பெற்றது. விழாவின் முக்கிய அம்சமாக ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணம், தேரோட்டம், வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி போன்ற விழாக்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர். மேலும் வைகை ஆற்றங்கரையில் தினந்தோறும் கலைநிகழ்ச்சிகளும், சிறுவர்கள் கொண்டாடி மகிழ ராட்டினங்கள் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள் உள்ளிட்டவைகளும் நடைபெறும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டு்களாக கொரோனா தொற்று காரணமாக சித்திரைத்திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தற்போது மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலை ஒட்டி உள்ள வைகை ஆற்றை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடியிடம் கோரிக்கை விடுத்தனர்.
கலெக்டர் தொடங்கி ைவத்தார்
இதை தொடர்ந்து அவர் கோரிக்கை விடுத்ததன் பேரில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வைகை ஆற்றை சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
வைகை ஆற்றுக்குள் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தவும், மேடு பள்ளங்களை சீரமைக்கவும் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் கண்ணன், நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம், நகர செயலாளர் பொன்னுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ராஜமணி, அண்ணாத்துரை, யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, யூனியன் துணைத்தலைவர் முத்துச்சாமி, நகர் மாணவரணி அமைப்பாளர் கார்த்திக், நெசவாளர் அணி அமைப்பாளர் பால்பாண்டி மற்றும் தி.மு.க. நகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story