எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்-23-ந்தேதி நடக்கிறது


எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்-23-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 18 March 2022 1:10 AM IST (Updated: 18 March 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 23-ந்தேதி நடக்கிறது.

கரூர், 
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் மறுநிரப்பு எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவதில் காணப்படும் குறைகள் மற்றும் நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது முகவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வரப்பெறும் புகார்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்குட்பட்டு எரிவாயு சிலிண்டர்கள் வினியோகத்தை சீர்படுத்த ஏதுவாக கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்களுடன் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 23-ந் தேதி மாலை 3.30 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
எனவே, எரிவாயு நுகர்வோர்கள் இந்த நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு வினியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என  மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story