தஞ்சை-விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்
தஞ்சை-விக்கிரவாண்டி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பாபநாசம்:
தஞ்சை-விக்கிரவாண்டி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தஞ்சை-விக்கிரவாண்டி நான்கு வழிச்சாைல
தஞ்சை-விக்கிரவாண்டி இடையே 164 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்தி ரூ.3517 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலைப்பணியினை விரைந்து முடித்திடும் நோக்கத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு வரையில் முதல் பகுதியாகவும், சேத்தியாதோப்பு முதல் தஞ்சை மாவட்டம் சோழபுரம் முடிய இரண்டாம் பகுதியாகவும், சோழபுரம் முதல் தஞ்சாவூர் வரை மூன்றாம் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
3 பகுதிகளாக...
முதல் பகுதி ரூ.711 கோடி திட்ட மதிப்பீட்டில் 66 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் நடந்து வருகிறது. இதில் கடந்த ஜனவரி மாதம் வரையில் 23½ கி.மீ தூரத்திற்கு பணிகள் நிறைவடைந்து உள்ளது.
இரண்டாம் பகுதி ரூ.1461 கோடி மதிப்பில் 50½ கி.மீ. தூரத்திற்கு பணிகள் தொடங்கப்பெற்று கடந்த ஜனவரி மாதம் வரையில் 28½ கி.மீ தூரத்திற்கு பணிகள் நிறைவடைந்து உள்ளது.
மூன்றாம் பகுதி ரூ.1345 கோடி திட்ட மதிப்பில் 47 கி.மீ. தூரத்திற்கு பணிகள் தொடங்கியது. இதில் கடந்த ஜனவரி மாதம் வரையில் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
பாலங்கள் அமைக்கும் பணிகள்
இந்த சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்்கு ஒரு பெரிய பாலம் (அணைக்கரை) மற்றும் 6 மேம்பாலங்கள், 14 சிறிய பாலங்கள், 21 குறுகிய பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட திட்டம் தீட்டப்பட்டு அதற்கேற்ப பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.சாலை அமைக்கும் பணிகளில் ெ்பரும்பகுதி முடிவடைந்து விட்டதாகவும், சிறு பாலங்கள் மற்றும் பெரிய பாலங்கள் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருவதாகவும், பாலங்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதும் இடையில் முடிவடையாமல் உள்ள சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெறும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள்...
இந்த பணிகள் விரைவாகவும், அதே நேரத்தில் தரமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர்கள், இந்த பணிகள் அனைத்தையும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ேமற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கூற்றுப்படி அடுத்த ஆண்டிலாவது இந்த நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு வருமா? என்று பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Related Tags :
Next Story