நகை பாலீஷ் செய்வதாக கூறி பெண்ணிடம் மோசடி; வடமாநிலத்தை சேர்ந்தவர் கைது
பாவூர்சத்திரம் அருகே நகை பாலீஷ் செய்வதாக கூறி பெண்ணிடம் மோசடி செய்த வடமாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆரியங்காவுர் மேலத்தெருவை சேர்ந்தவர் சுந்தரம் மனைவி ஒளிவு அம்மாள் (வயது 55). பீடி சுற்றும் தொழிலாளி. நேற்று காலை வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் அந்்த கிராமத்துக்கு வந்தார். அவர் ஒளிவு அம்மாள் வீட்டுக்கு சென்று அவரிடம் நகை பாலீஷ் செய்து தருவதாக கூறி உள்ளார். அதை நம்பி அவரும் தனது நகையை கொடுத்தார்.
பின்னர் ஒரு திரவத்தில் நகையை போட்ட அந்த நபர், பாலீஷ் செய்து விட்டதாக கூறி அதை எடுத்து ஒளிவு அம்மாளிடம் கொடுத்தார். அப்போது நகையின் எடை குறைந்து இருப்பது போல் அவருக்கு சந்தேகம் வரவே, அருகில் உள்ள ஒரு கடைக்கு சென்று எடையை சரிபார்த்தார். அப்போது நகையின் எடை 10 கிராம் அளவுக்கு குறைந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை அப்பகுதியினர் பாவூர்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜசேகர் (41) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story