தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 1:29 AM IST (Updated: 18 March 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கும்பகோணம், பேராவூரணியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்பகோணம்:
கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கும்பகோணம், பேராவூரணியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
ஆர்ப்பாட்டம் 
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். தேவனாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராமன், ஒன்றிய தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்கத்தை சேர்ந்த  ஜீவபாரதி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சங்கர், பக்கிரிசாமி உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 
பேராவூரணி 
இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பேராவூரணி பெரியார் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க பொறுப்பாளர் கருப்பையா தலைமை தாங்கினார். இ்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட  தலைவர் வாசு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் சிதம்பரம், வேலுச்சாமி, குமாரசாமி, ராமசாமி, சம்பத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

Next Story