ரேஷன் கடை விற்பனையாளர் சாவு
ரேஷன் கடை விற்பனையாளர் இறந்தார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 54). இவர் த.சோழங்குறிச்சி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் ரேஷன் கடையில் பணி முடிந்தபின்னர் மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். உடையார்பாளையம் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ராஜேந்திரனின் மொபட் மீது எதிரே சூரியமணல் கிராமத்தை சேர்ந்த பாலுசாமி(45) ஓட்டி வந்த மொபட் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரனை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் நேற்று இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story