தண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாணம்


தண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 18 March 2022 2:04 AM IST (Updated: 18 March 2022 2:04 AM IST)
t-max-icont-min-icon

தண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம், தீபாராதனையும், தொடர்ந்து இரவில் மேளதாளம் முழங்க சுவாமி திருவீதி உலாவும் நடந்து வருகிறது. விழாவின் 7-ம் நாளன்று சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கூத்தனூர் மூப்பனார் வகையறா நிலக்கிழார்கள் செய்திருந்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் செயல் அலுவலர் ஜெயலதா, எழுத்தர் தண்டபாணிதேசிகன், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், இரூர், பாடாலூர், குரூர், பொம்மனப்பாடி போன்ற கிராமகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4.45 மணியளவில் தொடங்கி நடக்கிறது.

Next Story