தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பட்டதாரி வாலிபர் பலி
தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பட்டதாரி வாலிபர் உயிரிழந்தார்.
குன்னம்:
தடுப்புச்சுவர் மீது மோதியது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், டி.வி.கே. நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் நவீன்குமார்(வயது 23). பட்டதாரி. இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சந்தியா(19) எனும் பெண்ணை நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளை நவீன்குமார் ஓட்ட, சந்தியா பின்னால் அமர்ந்திருந்தார். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தம்பை அருகே சென்றபோது நிலைதடுமாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
சாவு
இதில் படுகாயமடைந்த நவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சந்தியா பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story