2 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
2 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது
திருச்சி
திருச்சி புத்தூர் ஆபீசர்ஸ் காலனி அருகே இளநீர் வியாபாரம் செய்து வந்த பெண்ணை கடந்த மாதம் 6-ந் தேதி தொழில் போட்டி காரணமாக கொலை செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் (வயது33) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் நாகராஜ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது. அவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணத்தில் இருந்தது தெரிய வந்ததால் கொலை வழக்கில் கைதான நாகராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதேபோல வளநாட்டை அடுத்த தேனூர் அருகே உள்ள துலுக்கம்பட்டியைச் சேர்ந்த அருள்வாக்கு கூறும் பாலமுருகன்(35) கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி சிங்கிவயல் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்கிவயல் பகுதியை சேர்ந்த ஆதினமிளகியை(49) கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரை செய்ததின் பேரில் கலெக்டர் சிவராசு ஆதினமிளகியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story