புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 18 March 2022 2:26 AM IST (Updated: 18 March 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் குடிநீர் தட்டுப்பாடு
 ராமநாதபுரம் நகர் பகுதிகளில் தினசரி குடிநீர் வினியோகிக்கப்பட்ட நிலையில் தற்போது வாரத்திற்கு ஒரு சில நாட்கள் மட்டுமே வினியோகிக்கப்படுகின்றது. இதனால் தண்ணீர் வரும் நாட்கள் தெரியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீரை எதிர்நோக்கி ஒவ்வொரு நாட்களும் காத்திருக்ககூடிய சூழல் நிலவுகிறது. மேலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் வினியோகிக்கப்படும் நாட்களை முன்கூட்டியே அறிக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
 
மின்விளக்கு எரியுமா?
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். இருட்டை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திகேயன், வைகைவடகரை.

குண்டும், குழியுமான சாலை
 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றது. சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ், உசிலம்பட்டி.

ஓடை தூர்வாரப்படுமா?
 விருதுநகர் மாவட்டம் மல்லிப்புதூர் கிராமத்தில் உள்ள ஊருணிக்கு வருகின்ற நீர்வரத்து ஓடைபாதை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. ஊருணியில் தண்ணீரின் இருப்பு குறைந்து வருவதால் இப்பகுதி மக்களின் விவசாயம் பாதிக்கப்படுகின்றது. அதிகாரிகள் வரத்துப்பாதையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?.
பொதுமக்கள், மல்லிப்புதூர்.

கால்நடைகள் தொல்லை
 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மெயின் சாலையில் கால்நடைகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மேலும் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகளும் ஏற்படுகின்றது. வாகன ஓட்டிகளுக்கு தொல்லை தரும் கால்நடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கருப்பசாமி பாண்டியன், முதுகுளத்தூர்.

சீரான குடிநீர் வினியோகம்
 விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் 14-வது வார்டு பகுதியில் மாதம் ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. வழங்கப்படும் குடிநீரும் குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டுமே வினியோகிக்கப்படுகின்றது. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. மாதத்தின் அனைத்து நாட்களும் குடிநீர் சீராக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
முருகன், விருதுநகர்.

மதுபிரியர்கள் அட்டகாசம்
 சிவகங்கை மாவட்டம் புதுபட்டி கிராமத்தில் உள்ள பள்ளியில் இரவு நேரங்களில் சிலர் மதுஅருந்துவது உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மதுபிரியர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேந்திரன், சிவகங்கை.

மோசமான சாலை
  மதுரை மதுரா கோர்ட்ஸ் பாலம் ஏறும் இடத்தில் உள்ள சாலை பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்து மோசமான நிலையில் காணப்படுகின்றது. இந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அந்த சாலையில் பயணிப்பதால் விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலைைய சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜான்சன், மதுரை.வருமாறு:-

Next Story