திருச்சி வந்த ரெயிலில் மதுபாட்டில்கள் பறிமுதல்


திருச்சி வந்த ரெயிலில் மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 March 2022 2:36 AM IST (Updated: 18 March 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி வந்த ரெயிலில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

திருச்சி
காரைக்காலில் இருந்து திருச்சி வந்த ரெயிலில் குற்ற தடுப்புப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெட்டியில் பயணிகள் யாராலும் உரிமை கோரப்படாத நீலநிற பாலித்தீன் பையை எடுத்து சோதனை செய்தபோது அதில் 45 மது பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரெயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்தது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story