எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு: ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்வு - ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது


எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு: ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்வு - ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
x
தினத்தந்தி 18 March 2022 2:48 AM IST (Updated: 18 March 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பெங்களூரு:

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் சமையல் எண்ணெய் விலையும் திடீரென்று பல மடங்கு உயர்ந்து விட்டது. இதன் காரணமாக ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்த உரிமையாளர்கள் முடிவு செய்திருந்தாா்கள். ஏற்கனவே எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் வடை, பூரி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையை சிறிய அளவிலான ஓட்டல்களில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், எண்ணெய் விலை உயர்வு காரணமாக, ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

  அந்த கூட்டத்தில் சமையல் எண்ணெய் விலை உயர்வு காரணமாக அசைவ உணவுகள், எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் உணவுகள் தயாரிக்க அதிக செலவு ஆவதால், உணவுகளின் விலையை உயர்த்த வேண்டும் என்று உரிமையாளர்கள் கூறினார்கள். இதையடுத்து, பெங்களூருவில் உள்ள ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வர இருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராவ் தெரிவித்துள்ளார்.

Next Story